Published : 20 Apr 2023 07:07 AM
Last Updated : 20 Apr 2023 07:07 AM

சூடானில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு பல நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை

கோப்புப்படம்

புதுடெல்லி: சூடானில் இந்தியர்களின் பாதுகாப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். கர்தோம் நகரில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதனால் சூடானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்தியர்களின் பாதுகாப்புக்கு முடிந்த உதவியை செய்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். சூடானில் ஐ.நா அமைதிப்படையும் உள்ளது. அவர்களுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது.

சூடான் நிலவரத்தை, கர்தோம் நகரில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. டெல்லியில் புதிய கட்டுப்பாட்டு அறையை வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. அதன்மூலம் சூடானில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் உதவிகள் அளிக்கப்படுகின்றன. சூடானில் உள்ள இந்தியர்கள், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x