Last Updated : 04 Sep, 2017 07:03 PM

 

Published : 04 Sep 2017 07:03 PM
Last Updated : 04 Sep 2017 07:03 PM

மத்திய அரசில் ஐக்கிய ஜனதா தளம் இணையும் என்பது ஊடக யூகமே: நிதிஷ் குமார் விளக்கம்

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் மத்திய அமைச்சரவையில் நுழையும் என்ற எதிர்பார்ப்பு ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டதே தவிர அதில் எந்த வித உண்மையும் இல்லை என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.

இன்று பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமார், “நாங்கள் அது குறித்து பரிசீலிக்கவும் இல்லை, அதற்கான ஆசையும் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை. அமைச்சரவையில் இணைவது பற்றி ஊடகங்கள்தான் யூகங்களை வெளியிட்டன. அது அடிப்படை ஆதாரமற்றது.

உங்கள் யூகங்கள் தவறாகி விட்டது,எனவே இதனை நீங்கள்தான் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஷரத் யாதவ் குறித்த முடிவை சரியான தருணத்தில் எடுப்போம், அது குறித்து உங்களுக்குத் தெரிவிப்போம், அது வரை யூகங்களுக்கு இடமில்லை” என்ரார்.

ஐக்கிய ஜனதாதளத்தின் இரண்டு எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற செய்திகள் பரவலானதையடுத்து நிதிஷ் குமார் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x