Published : 21 Sep 2017 06:26 PM
Last Updated : 21 Sep 2017 06:26 PM

கஃபே காபி டே உரிமையாளருக்குச் சொந்தமான 25 இடங்களில் ஐ.டி. ரெய்டு

'கஃபே காபி டே' நிறுவன உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்துக்குச் சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

வருமான வரித்துறை சோதனை முதலில் பெங்களூரு, விட்டல் மல்லையா சாலையில் உள்ள 'கஃபே காபி டே' தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பெங்களூரு, ஹஸ்ஸன், சிக்மங்களூரு, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. விருந்தோம்பல், காபி தொட்டம், கன்சல்டன்ஸி ஆகிய துறைகளில் சித்தார்த் மேற்கொண்ட தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கணக்கில் காட்டப்படாத சொத்துகள் குறித்து தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் சோதனைகள் நடைபெற்றதாகவும், பழைய வழக்குகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனைக்கு உள்ளான அனைத்து இடங்களும் கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்துக்குச் சொந்தமானது ஆகும். எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் பாஜகவில் இணைந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x