Published : 30 Oct 2022 08:19 AM
Last Updated : 30 Oct 2022 08:19 AM
புதுடெல்லி: நாட்டின் முதல் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. பட்டேலின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த, பிரதமர் நரேந்திர மோடி நாளை கெவாடியா செல்கிறார்.
ஒற்றுமை தின அணி வகுப்பில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளின் வாத்தியக் குழு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
அம்பாஜியில் கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கினார்.
அம்பாஜி ஆலயத்தில் ஒரு காலத்தில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த பழங்குடியின குழந்தைகளுக்கு, ஸ்ரீசக்தி சேவா கேந்திரா தொண்டு நிறுவனம் கல்வியுடன் வாத்திய இசையை யும் கற்றுக் கொடுத்தது. இவர்களின் இசை நிகழ்ச்சி பிரதமர் மோடியை மிகவும் கவர்ந்தது. அதனால், வரலாற்று சிறப்புமிக்க தேசிய ஒற்றுமை தினத்தில், அவர்கள் கெவாடியாவுக்கு நாளை வந்து வாத்திய நிகழ்ச்சி நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT