Published : 26 Oct 2016 08:27 AM
Last Updated : 26 Oct 2016 08:27 AM

குடியரசுத் தலைவர் ஊதியம் ரூ.5 லட்சமாக உயருகிறது

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது குடியரசுத் தலைவர் ரூ.1.50 லட்சமும் துணை குடியரசுத் தலைவர் ரூ.1.25 லட்சமும் ஆளு நர்கள் ரூ.1.10 லட்சமும் மட்டுமே மாத ஊதியமாகப் பெறுகின்றனர். எனவே அவர்களின் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி குடியரசுத் தலைவரின் மாத ஊதியத்தை ரூ.5 லட்சமாகவும் குடியரசு துணைத் தலைவரின் மாத ஊதியத்தை ரூ.3.5 லட்சமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x