Last Updated : 19 May, 2016 08:10 AM

 

Published : 19 May 2016 08:10 AM
Last Updated : 19 May 2016 08:10 AM

தூய்மை இந்தியா திட்டத்துக்கு உதவி எண்

தூய்மை இந்தியா திட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பதை இல்லாமல் செய்யும் இலக்கை 100 சதவீதம் எட்டுவதற்காக நாடு முழுவதும் 4,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளில் தேசிய அளவிலான உதவி எண் (ஹெல்ப் லைன்) ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நான்கு இலக்க உதவி எண், தூய்மை இந்தியா திட்டம் தொடர் பாக மக்களுக்கு உதவும் வகையில் செயல்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நகர்ப்பகுதிகளில் உள்ள 4,041 உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்த உதவி எண் செயல்படுத்தப்படும். தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த உதவி எண் முக்கிய பங்கு வகிக்கும். கழிப்பிடம் கட்டுவது உட்பட அனைத்து வகையான உதவிக்கும் இந்த உதவி எண்ணை மக்கள் அணுகலாம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 2014 அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் இந்தியா முழுக்க கழிப்பிட வசதியை ஏற்படுத்துவது இதன் நோக்கம்.

மத்திய அரசு அலுவலகங்களில் தேவையற்ற கோப்புகள், பழைய கோப்புகள் பயன்படாத நிலையில் இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த கோரப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் தேவை யற்ற பொருட்களை அப்புறப் படுத்துதல், உபயோகப்படுத்த முடி யாத இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை அப்புறப்படுத் துதல், கழிப்பிடங்களை தூய்மை மற்றும் பழுதுநீக்கல் போன்ற பணிகளைச் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதி முதல் இந்த பிரச்சார இயக்கம் மேற் கொள்ளப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x