Published : 10 Feb 2022 06:36 AM
Last Updated : 10 Feb 2022 06:36 AM

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: 5-ம் இடம் மும்பை, 10-ம் இடம் பெங்களூரு

புதுடெல்லி: டாம்டாம் அமைப்பு 2021-ம் ஆண்டுக்கான உலகளாவிய போக்குவரத்து நெரிசல் குறியீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 58 நாடுகளில் உள்ள 404 நகரங்கள் போக்குவரத்து நெரிசல் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில், மும்பை 5-வது இடத்திலும், பெங்களூரு 10-வது இடத்திலும் உள்ளன. டெல்லி 11, புனே 21-வது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் இஸ்தான்புல் 1-வது இடத்திலும், மாஸ்கோ 2-வது இடத்திலும் உள்ளன.

2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மும்பை, பெங்களூரு, டெல்லி, புனே ஆகிய நான்கு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் 23 சதவிதம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான போக்குவரத்து நெரிசல் பட்டியலில் மும்பை 2-வது, பெங்களூரு 6-வது மற்றும் டெல்லி 10-வது இடத்திலும் இருந்தன.

2021-ம் ஆண்டுக்கான பட்டியலிலுள்ள 70 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் 2019-ம் ஆண்டைவிட அதிகரித்துள்ளது. அதே சமயம் 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிக அதிக நெரிசல் என்று அடையாளப்படுத்தப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை 13-லிருந்து 6 ஆக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x