Published : 10 Dec 2021 12:39 PM
Last Updated : 10 Dec 2021 12:39 PM

எல்லைப் பாதுகாப்புப் படை கிராமங்களுக்குள் நுழையக் கூடாது: போலீஸாருக்கு மம்தா பானர்ஜி உத்தரவு

எல்லைப் பாதுகாப்புப் படை அனுமதியின்றி கிராமங்களுக்குள் நுழையக் கூடாது என்ற மேற்கு வங்க போலீஸாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைத் தடுக்க தேடுதலை மேற்கொள்வதற்காக, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ.க்கு பதிலாக, 50 கி.மீ., தூரத்திற்குள் சந்தேகத்திற்கு இடமானவற்றைப் பறிமுதல் செய்யவும், சந்தேகத்திற்கிடமானவர்களை கைது செய்யவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், பிஎஸ்எப் சட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. மேற்கு வங்கம் வங்கதேசம், நேபாளம் மற்றும் பூட்டானுடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்பதால் மேற்கு வங்கத்தில் இச்சட்டம் குறித்து பதட்டம் நிலவுகிறது.

பிரதமரோடு சந்திப்பு

எல்லைப்படை மாநில அதிகாரத்திற்கு தலையிட சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர், மேகாலயா முதல்வர்கள் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பேச அவர் கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, ''இந்த முடிவு மிகவும் தவறானது. இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் தலையிடும் முயற்சி. அந்த பகுதிகளில் உள்ள மக்களை சித்திரவதை செய்யும். இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்'' என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக வங்கதேச எல்லைகளைத் தொடும் மேற்குவங்க எல்லைப் பகுதி காவல்துறை அதிகாரிகளின் நிர்வாகக் கூட்டங்களில் மம்தா கலந்துகொண்டு அவர்களுடன் பேசி புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதில் ''எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அதன் அதிகார வரம்புகளை மீறி மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கில் ஈடுபட அனுமதிக்க வேண்டாம்'' என்று காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் பேசுகையில், சமீபத்தில் நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் பற்றி மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். மற்றும் முர்ஷிதாபாத், மால்டா மற்றும் உத்தர் மற்றும் தக்ஷின் தினாஜ்பூர் போன்ற மாவட்டங்களில் பிஎஸ்எப் தங்கள் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட கிராமங்களுக்குள் நுழைந்த சம்பவங்களை மேற்கு வங்கம் கண்டதாக குற்றம் சாட்டப்பட்டினார்.

இது தொடர்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகளுடன் பேசுமாறு டிஜிபிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கிராம பகுதிகளில் பிஎஸ்எப் நுழைய அனுமதிக்கக் கூடாது

நாடியா மாவட்டத்தில் வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசியதாவது:

சட்டம்- ஒழுங்கு என்பது மாநிலத்தின் சட்டத்திற்குப்பட்டது என்பதை நமது காவல்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். வங்கதேச எல்லைக்கு அப்பாற்பட்ட கிராமப் பகுதிகளில் பிஎஸ்எப் நுழைய அனுமதிக்கக் கூடாது.

வங்கதேசத்துடன் நமது எல்லைப்பகுதி கரீம்பூரில் இருந்து தொடங்குகிறது. அப்பகுதிகளில் இன்னும் கூடுதலாக நாகா சோதனை (சோதனைச் சாவடி) களை அதிகரிக்க வேண்டும். அங்கே சோதனை சாவடிகளில் நமது ஐசிக்கள் (இன்ஸ்பெக்டர்-இன்-சார்ஜ்)களின் நடமாட்டத்தை அதிகரிக்கவும், நாகா சோதனையை முடுக்கிவிடவும் இன்ஸ்பெக்டர் இன்சார்ஜ்கள் கூடுதல் விழிப்புடன் இருக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நமக்கு வங்கதேசத்துடன் எல்லைகள் உள்ளன. அதையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும், உங்கள் அனுமதியின்றி எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கிராமங்களுக்குள் நுழைந்து எந்தவகை நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பதையும் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிஎஸ்எப் அவர்களின் வேலையைச் செய்யும், நீங்கள் உங்கள் வேலையைச் செய்வீர்கள். மாநில எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு உங்கள் விஷயம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். சாதாரண மக்கள் சித்திரவதை செய்யப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். இது தொடர்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகளுடன் பேசுமாறு டிஜிபிக்கு அவர் உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகராட்சி பகுதிகளில் அனைத்து மகளிர் போலீஸ் ரோந்து குழு அமைக்கப்படும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x