Published : 15 Dec 2015 09:58 AM
Last Updated : 15 Dec 2015 09:58 AM

சண்டி யாகத்துக்கு அழைப்பு விடுக்க நேரில் வந்த தெலங்கானா முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு விருந்து

தெலங்கானாவில் நடைபெற உள்ள சண்டி யாகத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக நேற்று நேரில் வந்த அம்மாநில முதல்வர் கே.சந்திர சேகர ராவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விருந்து அளித்தார்.

வரும் 23-ம் தேதி பிரம்மாண்ட மான முறையில் சண்டி யாகம் நடத்த திட்டமிட்டுள்ளார் தெலங் கானா முதல்வர் கே.சந்திர சேகர் ராவ். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிஉட்பட முக்கிய அரசியல், திரைப்பட துறையினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், சந்திர சேகர் ராவ் ஹைதராபாதில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று மதியம் விஜயவாடா வந்தார். இவ ருடன் அமைச்சர் ஈடல ராஜேந்தர், எம்.பி. சுமன் ஆகியோரும் வந்த னர். இவர்களை ஆந்திர துணை முதல்வர் சின்ன ராஜப்பா, அமைச்சர்கள் யனமல ராம கிருஷ்ணுடு, கிஷோர் பாபு மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், விஜயவாடாவில் உண்டவல்லி பகுதியில் உள்ள சந்திரபாபுவின் வீட்டுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சந்திரசேகர் ராவுக்கு பொன்னாடை அணிவித்து, பூங் கொத்து கொடுத்து வரவேற்றார் சந்திரபாபு நாயுடு. ஒருவருக் கொருவர் பரஸ்பரம் வாழ்த்து களை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் சண்டி யாகத்துக்கு கட்டாயம் வரும்படி சந்திர சேகர் ராவ், நாயுடுவுக்கு அழைப்பு கொடுத்தார். இதையடுத்து இருவரும் சுமார் 40 நிமிடங்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர். அதன் பின்னர், சந்திரசேகர ராவ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு தனது வீட்டில் 15 வகையான ஆந்திர உணவுகளை பரிமாறி வழி அனுப்பி வைத்தார் சந்திரபாபு நாயுடு.

இரு தலைவர்களுக்கும் இடையே அரசியல் ரிதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தா லும், ஆந்திர தலைநகர் அமரா வதிக்கான அடிக்கல் நாட்டு விழா வுக்கு வருமாறு தெலங்கானா முதல்வரை சந்திரபாபு நாயுடு நேரில் சென்று அழைத்தார். இதற்கு இணங்க ராவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை பிரதமர் மோடி வரவேற்றார்.

இப்போது தெலங்கானாவில் நடைபெறும் சண்டி யாகத்துக்கு வருமாறு தெலங்கானா முதல்வர் நாயுடுவை நேரில் சென்று அழைத் துள்ளார். இந்த யாகத்துக்கு கட்டா யம் வருவதாக நாயுடு வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. இந்த கலாச்சாரத்தை இரு தெலுங்கு மாநில மக்களும் வரவேற் றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x