Last Updated : 15 Dec, 2015 09:56 AM

 

Published : 15 Dec 2015 09:56 AM
Last Updated : 15 Dec 2015 09:56 AM

தரமான சேவையை உறுதி செய்ய வேண்டும்: செல்போன் நிறுவனங்களுக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுரை

செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.

செல்போனில் பேசிக்கொண் டிருக்கும்போது திடீரென துண்டிக் கப்படும் (கால் டிராப்) பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செல்போன் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு சமீ பத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரி வித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ‘‘வாடிக்கையாளர் களுக்கு தரமான சேவை வழங்கு வதை செல்போன் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என மீண்டும் அறிவுறுத்தினார்.

இது குறித்து அவர் கூறும் போது, ‘‘செல்போன் சேவை நிறுவனங்களின் பணியை வரவேற் கிறேன். அதே சமயம் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும். உள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் செல்போன் நிறுவனங் கள் ஈடுபட வேண்டும். தொலை தொடர்புத் துறை இந்த விவ காரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

செல்போன் சேவை நிறுவனங் கள் மிகப் பெரிய நிறுவனமாக உயர வேண்டும் என்பதை விட, வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க வேண்டும் என்பது தான் முக்கியம். நடப்பாண்டில் இணையதள பயன்பாட்டாளர் களின் எண்ணிக்கை 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிறு நகரங்களில் பிபிஒ மையங் களை தொடங்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளும் முழு மூச்சில் களமிறங்க வேண்டும்’’ என்றார்.

‘கால் டிராப்’ பிரச்சினைக்கு தீர்வு காண தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அபராதம் வசூலிக்க முடிவு செய்திருப்பதை எதிர்த்து செல்போன் சேவை நிறுவனங்கள் டெல்லி உயர் நீதி மன்றத்தை நாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x