Published : 17 Nov 2015 09:26 AM
Last Updated : 17 Nov 2015 09:26 AM

நாட்டில் ஊழல்வாதிகளை ஒழிக்கும் வரை சட்டை அணியாமல் சத்தியாகிரகம்: ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்குபவர்

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஓஎன்ஜிசியில் பணிபுரிகிறார் ஏ.டி. நாயக் (59). மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம். அலுவலகம், முதல் வகுப்பு விமான பயணம், உயரதிகாரிகள் பங்குபெறும் ஆலோசனைக்கூட்டம் என எந்த சூழலிலும் வெறும் வெள்ளை பனியனும், பேன்ட்டும் அணிந்துதான் பங்கேற்கிறார்.

பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களைப் போன்று, தோரணையாக சட்டை, கோட் அணிவதில்லை. கடந்த 2005 நவம்பர் 16-ம் தேதியிலிருந்து இதுபோன்ற சட்டை அணியாமல் காட்சியளிக் கிறார் நாயக். ஓஎன்ஜிசியில் கண் காணிப்புப் பொறியாளராக பணி புரியும் நாயக், தனது பணி நேரத்தி லும் சட்டையில்லாமல்தான் காட்சி யளிக்கிறார்.

மெக்கானிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ள நாயக்குக்கு, சந்த்கேடா கிராமத்தில் 3.2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நகரமைப்புத் திட்டத் தின் கீழ் 40 சதவீத நிலத்தை பொது சாலைக்காக அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கழித்து விட்டனர். பல முறை முறையிட்டும் பலனில்லை. மாநில ஆணையத்தில் முறையிட் டுள்ளார். அந்த மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விரக்தி அடைந்த அவர், அதிகாரிகள் முன்னிலையிலேயே கடந்த 2005 நவம்பர் 16-ம் தேதி தனது சட்டையைக் கிழித்து எறிந்து விட்டார்.

அன்றுமுதல் சட்டை அணிவதே இல்லை. நாட்டில் ஊழல்வாதிகள் எப்போது ஒழிக்கப்படுவார்களோ அப்போதுதான் சட்டை அணிவேன் என சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளார் நாயக்.

கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து காந்தி குல்லாய் அணியத் தொடங்கியுள்ள நாயக், அதில் தனது பட்டப்படிப்புடன், ஊழலை ஒழிப்போம் என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளார்.

“ஊழல் மலிந்து விட்டது என் பதை யாருக்கு நான் சொல்ல விரும்புகிறேனோ அவர்களில் பலருக்கு என் தோற்றம் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. நான் சாதாரண மனிதன். ஊழலுக்கு எதிராக என்னால் போராடுவதற்கு இது ஒன்றுதான் எனக்கு வழி” என்கிறார் நாயக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x