Last Updated : 25 Nov, 2015 09:49 AM

 

Published : 25 Nov 2015 09:49 AM
Last Updated : 25 Nov 2015 09:49 AM

லாலுவுடன் கைகோத்த விவகாரம்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஹசாரே கண்டனம்

மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலுவுடன் ஒரே மேடையில் கைகளை குலுக்கிய கேஜ்ரிவாலுக்கு, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிஹார் முதல்வராக கடந்த வெள்ளிக்கிழமை நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலும் பங்கேற் றார். அப்போது மேடையில் இருந்த லாலு கேஜ்ரிவாலை அழைத்து கட்டியணைத்தார். அத்துடன் அவரது கைகளையும் உயர்த்தி வெற்றிச் சின்னத்தை காண்பித்தார்.

மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக இரு ஆண்டு களுக்கு முன் லாலுவை கடுமை யாக விமர்சித்த கேஜ்ரிவால், திடீரென அவருடன் கைகோத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் இதற்கு கடும் விமர் சனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவரான யோகேந்திர யாதவ், ‘‘அரசியலில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் லாலுவுடன், கேஜ்ரிவால் இணைந்தது அவமானமாக இருக் கிறது’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த நாட்டையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும் இதற்கு கடும் கண் டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது ‘‘அரவிந்த் கேஜ்ரிவாலின் சகவா சத்தை நான் விட்டொழித்து விட்டது நல்லதாகி விட்டது. இல்லாவிட்டால் என்னையும் ஊழல்வாதிகள் பட்டிய லில் இணைத்திருப்பார்கள். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த கேஜ்ரிவால், மாட்டுத் தீவன ஊழ லில் சிக்கிய லாலு போன்றவர்களின் கரங்களை பிடித்து மகிழ்ச்சியாக குலுக்குவதும், கட்டி அரவணைப் பதும் சரியாக தோன்றவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x