Published : 15 Feb 2021 03:11 AM
Last Updated : 15 Feb 2021 03:11 AM

உலக சாலை விபத்துகளில் இந்தியாவின் பங்கு 10 சதவீதம்: உலக வங்கி தகவல்

சாலை பாதுகாப்புத் தொடர் பான அறிக்கை ஒன்றை உலக வங்கி நேற்றுமுன்தினம் வெளியிட்டது. உலகளா விய அளவில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை யில் இந்தியாவில் உள்ள வாகனங்களின் பங்கு ஒரு சதவீதம்.

ஆனால் உலக அளவில் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு10 சதவீதம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் மக்களே அதிக அளவில்சாலை விபத்துக்கு உள்ளாவதாக உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் தெரிவித்தார். குறிப்பாக பெண்களும் முறைசாரா துறையில் பணிபுரிபவர்களும் அதிகஅளவில் விபத்துக்குள்ளா வதாக அவர் குறிப்பிட்டார்.

தரமான சாலைகள் அமைப் பது, நெடுஞ்சாலைகளில் அவசர மருத்துவ மையங்கள் அமைப்பது, வாகனங்களின் பாதுகாப்புத்தன்மையை முறையாகப் பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகள் சாலை விபத்துகளைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x