Published : 06 Dec 2020 12:09 PM
Last Updated : 06 Dec 2020 12:09 PM

தற்சார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞானிகள் புதுமையை கண்டுபிடித்து போட்டியை உருவாக்க வேண்டும்: தர்மேந்திர பிரதான் 

புதுடெல்லி

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையை கண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரத்துறை ஆகிய அமைச்சகங்கள் நடத்துகின்றன. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி ‘‘தற்சார்பு இந்தியா மற்றும் உலகளாவிய நலன்’’ என்ற தலைப்பில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

உலகளவில் போட்டி போடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். சமூக வளர்ச்சியில் அறிவியல் மற்றும் புதுமையின் பங்கு முக்கியமானது. அனைத்து துறைகளிலும், நமது அறிவியல் அறிவு மற்றும் புதுமையை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டும் என்பதை கொவிட்-19 தொற்று நிருபித்துள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டம், சொந்த தேவையை மட்டும் நிறைவேற்றுவதில்லை, அது உலக சமுதாயத்தின் நம்பிக்கையாக உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொருள்படும் வகையிலான வசுதைவஹ குடும்பகம் என்ற உணர்வை ஏற்படுத்தும். சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தாமல், இந்தியாவின் தற்சார்பு முயற்சியை அடைய முடியாது என பிரதமர் கூறியுள்ளார்.

வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சூழல் மூலம் மிகச் சிறந்த தயாரிப்புகளையும்,சேவைகளையும் நாம் முடியும். நமது பழங்கால பாரம்பரியத்துடன், நவீன அறிவியல் மற்றும் கணிதத்தை ஒன்றிணைத்து நமது விஞ்ஞானிகள் புதுமைகளை படைத்து சாதிக்க வேண்டும்.

விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நமது விஞ்ஞானிகள், தொழில் மற்றும் சமூக பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x