Last Updated : 08 Jun, 2020 09:15 AM

 

Published : 08 Jun 2020 09:15 AM
Last Updated : 08 Jun 2020 09:15 AM

8 கோடி இலக்கு: இதுவரை 20.36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்

கரோனா லாக்டவுன் காலத்தில் 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க திட்டமிட்டிருந்த நிலையில் இதுவரை 20.36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் புலம்பெயர் தொழிலாளர்கள் பட்டிணியோடு இருக்கக்கூடாது என்பதற்காக மாநில, மத்திய ரேஷன் கார்டு இல்லாத 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களில் நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியமும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக இரு மாதங்களுக்கு வழங்க கடந்த மாதம் 14ம் தேதி மத்திய அ ரசு உத்தரவிட்டது.

8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்க இலக்கு வைக்கப்பட்ட நிலையில் இதுவரை 20.36லட்சம் பேருக்கு மட்டுமே மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள என்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது

இதுகுறித்து உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியங்கள், பருப்பு வழங்க திட்டமிட்ட நிலையில் இதுவரை 4.42 லட்சம் டன் உணவு தானியங்கள் மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு, அதில் 10,131 டன் உணவு தானியங்கள் மட்டுமே 20.36 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இலக்கு வைத்துள்ள 8 கோடி புலம்ெபயர் தொழிலளர்களில் இந்த சதவீதம் என்பது வெறும் 2.25 சதவீதம் மட்டும்தான். கடந்த மே மற்றும் நடப்பு ஜூனில் 7.99 லட்சம் டன் உணவுதானியங்கள் அளிக்கப்பட வேண்டியநிலையில் மிகக்குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உணவு தானியங்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. சில மாநில அரசுகள் தானியங்களாகவும், சில அரசுகள் சமைக்கப்பட்ட உணவுகளாகவும், டோக்கன் வழங்கியும் தானியங்களை வழங்குகிறார்கள்

1.96 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்துக்காக இரு மாதங்களுக்கு வழங்க 39 ஆயிரம் டன் சென்னா பருப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 28,306டன் சென்னா பருப்பு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டநிலையில் அதில் 15,413 டன் பருப்பு மட்டுமே இதுவரை எடுக்கப்பட்டுள்ளன. 631 டன் பருப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

அதேசமயம், பிரதான் மந்திரி கரீ்ப் கல்யான் யோஜனா திட்டத்தில் மாநில அரசுகள் தங்கள் இலக்கில் ஏப்ரல் மாதத்தில் 92.45 சதவீதத்தை எட்டியுள்ளன. மே மாதத்தில் 87.33 சதவீதத்தையும், ஜூனில் இதுவரை 17.47 சதவீதத்தையும் அடைந்துள்ளன.

மாநில அரசுகள் இதுவரை 105.10 லட்சம் டன்உணவு தானியங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன. இதில் ஏப்ரல் மாதத்தில் 36.98 லட்சம் டன்னும், ஜூனில் 34.93 லட்சம் டன்னும் பெற்றுள்ளன. 5.87 லட்சம் டன் பருப்பு 3 மாதங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதில் 4.71 லட்சம் டன் பருப்புள் மாநில அரசுகளை சென்று சேர்ந்துள்ளன. இதில் 2.67லட்சம் டன் பருப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x