Published : 08 Jun 2020 07:06 AM
Last Updated : 08 Jun 2020 07:06 AM

உ.பி.யில் முகக் கவசம் அணியாததால் தாமாக அபராத கட்டணத்தை செலுத்திய போலீஸ் ஐ.ஜி.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம்விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், கான்பூரில் போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் மோகித் அகர்வால், பர்ராஎன்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டார். அப்போது, தான் முகக் கவசம் அணியவில்லை என்பதை உணர்ந்து மோகித், தனதுஜீப்பில் வைத்திருந்த முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டார்.

எனினும், முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக இன்ஸ்பெக்டரிடம் தனக்கு அபராதம் விதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் கொடுத்தார். அபராதத் தொகையான ரூ.100-ஐ போலீஸ் ஐ.ஜி. மோகித் அகர்வால் செலுத்தினார்.

இதுகுறித்து ஐ.ஜி. அகர்வால் கூறும்போது, ‘‘முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக அபராதம்செலுத்துவதுதான் நெறிமுறையாக இருக்கும் என்றும் இது மற்றபோலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கருதினேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x