Published : 27 Aug 2015 10:14 AM
Last Updated : 27 Aug 2015 10:14 AM

மகப்பேறுகால விடுமுறையை 8 மாதங்களாக அதிகரிக்க வேண்டும்: மத்திய தொழிலாளர் நல அமைச்சருக்கு மேனகா கடிதம்

பெண்களுக்கு மகப்பேறு கால விடு முறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதங்களாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு 1961-ம் ஆண்டின் மகப்பேறு கால சலுகைகள் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறது. இதை 6 மாதங்களாக அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய தொழி லாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு மேனகா காந்தி சமீபத்தில் எழுதியுள்ள கடிதத்தில், “வேலைக்குச் செல்லும் அனைத்து பெண்களுக்கும் மகப்பேறு கால விடுமுறையை 8 மாதங்களாக அதி கரிக்க வேண்டும். எதிர்பார்க்கப் படும் மகப்பேறு தேதிக்கு 1 மாதம் முன் தொடங்கி, இந்த விடுமுறையை அளிக்கவேண்டும். இதன் மூலம் பச்சிளம் குழந்தைகள் அதிக அக் கறையும் பராமரிப்பும் பெற முடியும். இந்த சலுகையை குழந்தைகளை தத்து எடுக்கும் பெண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில், அமைப்பு சாரா துறை களில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். எனவே அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் மகப் பேறு கால சலுகைகள் வழங்கப் பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொழிலாளர் நல அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “மகப்பேறு கால சலுகைகள் சட்டம், 1961-ல் திருத்தம் செய்யும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக விவாதங்கள் மேற்கொண்டுள்ளோம். திருத்தங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் ஆலோசிப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x