Last Updated : 09 Aug, 2015 11:18 AM

 

Published : 09 Aug 2015 11:18 AM
Last Updated : 09 Aug 2015 11:18 AM

குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாரபட்சம் ஏன்?

குடியேற்றம் பற்றிய செய்தி ஒன்றை பார்த்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப் போவதாக ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மத கொடுமைகளுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக குடியுரிமை சட்டம் 1955-ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவில் குடியேறியவர்களில் இந்துக்கள் மட்டுமின்றி புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், சவுராஷ்டிரியர்கள், சீக்கியர்கள், ஜைனர்களுக்கும் குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அதன்படி மேற்குறிப்பிட்ட இனத்தவர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக குடியுரிமை பெறும் வகையில் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

இது நல்ல விஷயம்தான். தாங்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது இனத்தின் பெயரால் கொடுமைக்கு ஆளாகும்போது, வேறு நாடுகள் அவர்களுக்கு தஞ்சம் அளிப்பது அவசியம்தான். ஆனால், மேற்கூறிய பட்டியலை பார்த்தால், முஸ்லிம்களின் நிலை என்ன என்பது என்னுடைய கேள்வி. குடியுரிமை பெறும் பட்டியலில் குறிப்பாக முஸ்லிம்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு வெளிப்படையான காரணங்கள் இருப்பது உண்மைதான்.

மதரீதியாகத்தான் இந்தியப் பிரிவினை நடந்தது. கடந்த 1945 - 46-ல் நடந்த தேர்தலில் முஸ்லிம் லீக் அதன் தொகுதிகளில் வெற்றி பெற்றது. (அப்போது குறிப்பிட்ட வாக்காளர்கள் மட்டுமே அதுவும் குறைந்த எண்ணிக்கை யிலான மக்களே வாக்களித்தனர்.) முஸ்லிம்கள் இந்திய பிரிவினையை வேண்டி பெற்றனர். அதன்பிறகு தங்களது புதிய நாட்டை விரும்பாவிட்டாலும், புகார் சொல்லக் கூடாது. இதுதான் லாஜிக் என்று பாஜக.வும் குடியுரிமை தொடர்பாக கொண்டு வரப்பட உள்ள சட்டமும் நினைப்பதாக தெரிகிறது. (இது கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தெளிவாக தெரிந்தது.) இந்த சென்டிமென்டில்தான் குறிப்பாக முஸ்லிம்கள் விடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதை ஒரு நிலைக்கு மேல் விவாதம் செய்யக் கூடாது.

இந்தியாவில் எல்லா அரசாங் கங்களும் இந்துக்களை மட்டுமே பார்க்கும். இந்தியப் பிரிவினைக்கு முன்னர் இருந்த பகுதியில் இருந்து வரும் சீக்கியர்கள் மீதும் பரிதாபம் காட்டும். ஊடகங்களும் அதுபோன்ற மக்களின் மறுவாழ்வுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்கும். என்னுடைய பிரச்சினையே சட்டத்தில் செய்யப் பட உள்ள மாற்றங்கள் பற்றியது தான். குடியுரிமை சட்டத்திலும் பாஸ்போர்ட் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம்தான்.

அதேநேரத்தில் இதுபோல் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்தவர்களுக்கும் இந்திய குடியுரிமை எளிதாக கிடைப்பதற்கு சட்டத் திருத்தம் அனுமதிக்க வேண்டும். அதுதான் நல்லது. குறிப்பிட்ட ஒரு மதத்தவர்களை மட்டும் விட்டுவிட்டு அரசு எப்படி சட்டத்தை கொண்டு வரப்போகிறது.

இந்திய அரசியல் சட்டப் பிரிவு 14 மற்றும் 15-ல், ‘‘சட்டத் தின் முன் எல்லோரும் சமம். யார் ஒருவருக்கும் சம உரிமையை மறுக்க கூடாது. இந்தியாவுக்குள் சமமான சட்ட பாதுகாப்பையும் மறுக்க கூடாது. ஜாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம் போன்ற வற்றால் பாரபட்சம் காட்ட கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சட்டத்தில் எப்படி மாற்றங்கள் செய்யப் போகிறார்கள்? உதாரணமாக முஸ்லிம்களை தவிர்த்துவிட்டு வங்கதேச கிறிஸ் தவர்கள், இந்துக்கள், சீக்கியர் கள் ஆகியோர் இந்தியாவில் குடியுரிமை பெற தகுதியுடைய வர்கள் என்ற வகையில் எப்படி சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவார்கள்? அப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு எதிர்ப்புகள் கிளம்பும் என்றே நினைக்கிறேன். ஒரு மதத்தவரை மட்டும் விட்டுவிட்டு ஒரு சட்டத்தை கொண்டு வருவ தற்கு வாய்ப்பில்லை என்றுதான் கருதத் தோன்றுகிறது. இன்னொரு விஷயமும் இதில் உள்ளது. முஸ்லிம் நாடுகளில் இருந்து ஏன் முஸ்லிம்கள் வெளியேற நினைக் கின்றனர். சிரியாவில் இருந்து இராக்கிற்கும் இராக்கில் இருந்து லிபியாவுக்கும் ஏன் முஸ்லிம்கள் வெளியேறுகின்றனர். இதுபோல் பல காரணங்களால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஏற் கெனவே வெளியேறி உள்ளனர்.

நம்மை பொறுத்த வரையில், முஸ்லிம் என்பது ஒருவரின் அடையாளம். ஷியா, அகமதி, பெண், கம்யூனிஸ்ட், மதங் களை எதிர்ப்பவர், தன்பாலின உறவாளர், நாத்திகர் போன்ற பல காரணங்களுக்காக அவர்கள் குறிவைக்கப்படலாம்.மேலும், ‘‘குடியுரிமை சட்டத்தில் திருத் தங்கள் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட மதத்தவரை விட்டு விடுவது நமது அண்டை நாடுகளுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தி சொல்கிறது. இந்த எச்சரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x