Last Updated : 09 Aug, 2015 11:14 AM

 

Published : 09 Aug 2015 11:14 AM
Last Updated : 09 Aug 2015 11:14 AM

இமாச்சலத்தில் கனமழைக்கு 4 பேர் பலி

இமாசலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டம், தரம்பூர் பகுதியில் நேற்று பெய்த கனமழைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தரம்பூரில் நேற்று கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு மண்ணில் புதையுண்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபோல் பியாஸ் நதியின் கிளை நதியான சோன் குத் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சாது ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சோன் குத் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இதன் அருகில் உள்ள தரம்பூர் பஸ் நிலையம், கடைத் தெருக்கள், வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பஸ் நிலையத்தில் காத்திருந்தவர்கள் முதல் தளத்துக்கு சென்று உயிர் தப்பினர். இங்கிருந்த 3 பஸ்கள் சேதம் அடைந்தன. இதுதவிர அப்பகுதியில் கால்நடைகள், கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப் பட்டுகிறது. அப்பகுதியில் கன மழை நீடிப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தடைபட் டுள்ளன.

இமாசலப்பிரதேசத்தில் மணாலி கிரத்பூர் தேசிய நெடுஞ்சாலை, தரம்பூர் ஹர்சிபட்டான் சாலை ஆகியவை மழையால் சேதம் அடைந்துள்ளன. இவற்றில் பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x