''சிறுபான்மை என்றால் முஸ்லிம்கள் மட்டுமே அல்ல'' - மக்களவையில் முக்தர் அப்பாஸ் நக்வி பதில்

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீ.
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீ.
Updated on
1 min read

சிறுபான்மை என்பது முஸ்லிம்களை மட்டும் குறிக்கவில்லை. சமணர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய அறிவிக்கப்பட்ட ஐந்து சிறுபான்மையினர் உள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்தார்.

மக்களவையில் ஒரு துணை கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ''யுபிஏ அரசாங்கத்தில் மிகவும் குறைவாக 90 மாவட்டங்களுக்கு மட்டுமே இயங்கிவந்த 'பிரதான்மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம்' (பி.எம்.ஜே.வி.கே) திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் 308 சிறுபான்மை மாவட்டங்களை இணைத்துள்ளது. 

சிறுபான்மை என்ற சொல் முஸ்லிம்களை மட்டும் குறிக்கவில்லை. சமணர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகியஅறிவிக்கப்பட்ட ஐந்து சிறுபான்மையினர் உள்ளனர். சிறுபான்மையினர் அதிகம் உள்ள 870க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 321 நகரங்கள் மற்றும் 109 மாவட்டத் தலைமையகங்கள் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்குப் பயனளிக்காத ஒரு மாவட்டமும் இல்லை. மூன்று கோடிக்கும் மேற்பட்ட அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுள்ளனர்'' என்று முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in