Published : 30 Jun 2015 12:07 PM
Last Updated : 30 Jun 2015 12:07 PM

கேரளத்தின் அருவிக்கரா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கேரள மாநிலம், அருவிக்கரா சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் கே.ஏ.சபரிநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட 10,000 வாக்குகள் அதிகமாக பெற்று வென்றார்.

அருவிக்கரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபரிநாதனும், இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்.,) சார்பில் முன்னாள் சபாநாயகரான எம்.விஜயகுமாரும், பாஜக சார்பில் ஓ.ராஜகோபாலும் களம் இறக்கப்பட்டனர்.

மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இருந்தபோதும், இத்தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ.சபரிநாதன் பெற்ற வாக்குகள் 56,448. இடதுசாரி வேட்பாளர் விஜயகுமார் 46,320 வாக்குகள் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x