Last Updated : 11 May, 2015 11:28 AM

 

Published : 11 May 2015 11:28 AM
Last Updated : 11 May 2015 11:28 AM

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குருவைச் சந்தித்தார் பிரதமர் மோடி

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது குரு சுவாமி ஆத்மாஸ்தானந்த மஹராஜை பிரதமர் மோடி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் சந்தித்தார்.

குஜராத் மாநிலம், மேசனா மாவட்டத்தில் உள்ள வத்நகரில் பிறந்து வளர்ந்த மோடி தனது சிறு வயதில் ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி செல்வார். கடந்த 1966-ம் ஆண்டில் 16-வது வயதை எட்டிய மோடி, ராஜ்கோட் மடத்துக்குச் சென்று அந்த மடத்தின் தலைமை பொறுப்பில் இருந்த சுவாமி ஆத்மாஸ்தானந்த மஹராஜை சந்தித்தார். அப்போது துறவியாகும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஆனால் மோடியை துறவி யாக்க சுவாமி ஆத்மஸ்தானந்த மஹராஜ் விரும்பவில்லை. அவர் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங் கினார். அதை ஏற்றுக் கொண்ட மோடி தனது அரசியல் பயணத்தை கீழ்நிலையில் இருந்து தொடங்கி நாட்டின் பிரதமராகி உள்ளார்.

மோடியின் வாழ்க்கையை மாற்றிய சுவாமி ஆத்மஸ்தானந்த மஹராஜ் தற்போது ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக உள்ளார். 98 வயதாகும் அவர் சில ஆண்டு களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி கொல்கத்தாவின் பேளூர் மடத்தில் நேற்றுமுன்தினம் சந்தித்தார். சுவாமியின் உடல்நிலை குறித்து அங்கிருந்த துறவிகளிடம் கேட்டறிந்தார்.

பேளூர் மடத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. அங்கிருந்த துறவிகளிடம் பேசிய மோடி, நானும் ராம கிருஷ்ண மடத்தைச் சேர்ந்தவன் தான் என்று உரிமையுடன் தெரி வித்தார்.

பின்னர் சுவாமி விவேகானந்தரின் காலணி வைக்கப்பட்டுள்ள அறையில் அமர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்தார். நேற்றுகாலை அவர் தாக்சினேஸ்வர் காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x