Last Updated : 09 Apr, 2015 10:28 AM

 

Published : 09 Apr 2015 10:28 AM
Last Updated : 09 Apr 2015 10:28 AM

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன வரவு-செலவு கணக்கில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக தொடரப் பட்டுள்ள வழக்கில் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இந்த நிறுவனத்தின் லாபத்தை பல ஆண்டுகளாக மிகைப்படுத்திக் காட்டியதாக கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அதன் அப்போதைய தலைவர் ராம லிங்க ராஜு தாமாக முன்வந்து தெரி வித்தார்.

இதையடுத்து ராஜு உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் 226 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 3,000 ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

விசாரணை முடிந்ததையடுத்து, மார்ச் 9-ம் தேதி தீர்ப்பு வெளியிடப் படும் என நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இந்நிலையில், ஏப்ரல் 9-ம் தேதிக்கு தீர்ப்பை மீண்டும் ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம் எக்காரணத்தைக் கொண்டும் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட மாட்டாது என்றும் மார்ச் 9-ம் தேதி நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் இப்போது ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x