Published : 21 Sep 2016 10:56 AM
Last Updated : 21 Sep 2016 10:56 AM

ஊடகங்களில் வரும் வன்முறைக் காட்சிகள் பதற்றம், குற்றங்களை அதிகரிக்கும்: மனநல மருத்துவர் தகவல்

டெல்லியில் காதலிக்க மறுத்த பெண்ணை தொடர்ந்து கத்தியால் குத்தும் சிசிடிவி பதிவு பெரும் பாலான டிவிக்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் கூட சவுதியில் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட ஒருவரின் தலையை நடு வீதியில் அறுத்து எறியும் காட்சி வாட்ஸ் அப்பில் வந்தது. இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, மனதில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

வன்முறை காட்சிகளை ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பு வது தவறு மட்டுமல்ல, கண்டிக் கத்தக்கதும்கூட. ஒருவர் கொடூர மாக கொல்லப்படுவதையும் தாக்குதலுக்கு ஆளாவதையும் பார்த்தால் உறுதியான மனம் படைத்தவர் கூட நிச்சயம் பாதிப்பு அடைவார். மனப் பதற்றம் ஏற் படும். குறைந்தபட்சம் ஒரு நாள் தூக்கமாவது கெடும்.

குடும்பத்தில் யாருக்காவது மனநல பாதிப்போ அல்லது குறை பாடுகளோ வெளியே தெரியாமல் இருக்கிறபட்சத்தில் அதை இதுபோன்ற சம்பவங்கள் தூண்டிவிட்டு அதிகரிப்பதற்கான சாத்தியமும் உண்டு. மனக் கோளாறு, அதீத மனப் பதற்றம் ஆகியவை மரபு வழி வரும் என்பதை பலரும் உணர்வதில்லை. மற்ற நோய்களைப் போலவே மன ரீதியான சிக்கல்களும் பரம்பரையாகத் தொடரும் சாத்தியம்கொண்டவை.

ஏற்கெனவே நம் சமூகத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கிறவர்கள், தாங்களும் அதைப் போல செய்தால் என்ன என்று நினைக்கலாம்.

எல்லாருமே அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போதும், போதையின் பிடியில் நிதானமிழந்து இருக்கும்போதும் அதைச் செய்வதற்கான சாத்தியம் அதிகம். இதை learned behavior என்று சொல்வார்கள்.

இதுபோன்ற வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே மீறிப் பார்த்தாலும் அதை மறந்து விட்டு, மனதை வேறு விஷயங் களில் ஈடுபடுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x