Last Updated : 01 Feb, 2017 09:50 AM

 

Published : 01 Feb 2017 09:50 AM
Last Updated : 01 Feb 2017 09:50 AM

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அரசு அதிகாரியின் ரூ.25 கோடி சொத்துகள் முடக்கம்

பண மதிப்பு நீக்க நடவடிக் கையை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை அதிகாரி கள் தொடர் சோதனையில் ஈடு பட்டனர். இதில் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர் கள் ஆகியோரின் வீடுகளில் பதுக் கப்பட்டிருந்த ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் சிக்கின.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமாக இருந்தவராக கருதப்படும் சாலை மேம்பாட்டுத் துறை முதன்மை திட்ட அலுவலர் ஜெயசந்திராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின. மேலும் 11 கிலோ தங்கம், கணக்கில் வராத பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெய சந்திரா கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயசந்திராவுக்கு சொந்தமாக பெங்களூரு, சித்ரதுர்கா மட்டுமில்லாமல் சென்னை, ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலும் அசையா சொத்துகள் உள்ளன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின. இதில் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது மகன், மருமகன் மற்றும் உறவினர்கள் பெயரில் ஜெயசந்திரா வாங்கியுள்ளார்.

அந்த சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்களை ஜெயசந்திரா தாக்கல் செய்யவில்லை. மேலும் சட்டவிரோதமான முறையில் அந்தச் சொத்துகளை சேர்த்ததாக ஜெயசந்திரா உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பெங்களூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட‌ இடங்களில் உள்ள 13 வீடுகள், 3 இடங்களில் உள்ள விவசாய நிலம் உள்பட ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x