Last Updated : 05 Jul, 2016 12:30 PM

 

Published : 05 Jul 2016 12:30 PM
Last Updated : 05 Jul 2016 12:30 PM

மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் நீக்கம்

மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2-வது முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. | விரிவாக அறிய > >மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

அதேவேளையில், மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ரசாயன மற்றும் உர துறை இணை அமைச்சர் நிஹல்சந்த் மேக்வால், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதீரியா, நீர்வளத் துறை இணை அமைச்சர் சன்வர் லால் ஜாட், பழங்குடியின விவகாரத்துறை இணை அமைச்சர் மன்சுக்பாய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் டி.பாஸ்வா, எம்.கே.குந்தாரியா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x