Published : 11 Sep 2016 11:50 AM
Last Updated : 11 Sep 2016 11:50 AM

காஷ்மீர் மோதலில் 2 போராட்டக்காரர்கள் பலி

காஷ்மீரின் வெவ்வேறு இடங் களில் நேற்று போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் இடை யிலான மோதலில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தெற்கு காஷ்மீர், ஷோபியான் மாவட்டம், துக்ரூ என்ற இடத் தில் கல்வீச்சில் ஈடுபட்ட போராட் டக்காரர்களை பாதுகாப்பு படையி னர் கலைக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதில், அது சயர் அகமது ஷேக் (25) என்ற இளைஞர் மீது விழுந்து வெடித்தது. இதில் அவர் உயிரிழந் தார்.

அனந்தநாக் மாவட்டம், பேட்டங்கூ என்ற இடத்தில் போராட்டக்கார்களை விரட்ட பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் யவர் அகமது தார் (23) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இதன்மூலம் காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக நீடிக்கும் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந் துள்ளது. காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கடந்த ஜூலை 8-ம் தேதி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது.

காஷ்மீரில் நேற்று 64-வது நாளாக அனைத்து கல்வி நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து, சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரிவினைவாதிகள் தங்கள் கடையடைப்பு போராட்ட அழைப்பை நேற்று முன்தினம் 12 மணி நேரம் தளர்த்தினர். இதையடுத்து நகர் தெருக்களில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நேற்று ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. என்றாலும் 144 தடை உத்தரவு நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x