Published : 23 Sep 2016 10:12 AM
Last Updated : 23 Sep 2016 10:12 AM

ஆந்திராவில் பலத்த மழை பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் மாயம்

ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 10 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். கன மழையால் பஸ், ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா வின் கடலோர பகுதிகளான பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நேற்று கன மழை பெய்தது. பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் ஏரிகளில் மழைநீர் அதிகரித்தது. பல அணைகள் நிரம்பின.

குண்டூரில் சில பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித் துள்ளது. பிடுகுராள்ளு அருகே ரயில் தண்டவாளத்துக்கு மேல் வெள்ளம் சூழ்ந்ததால், குண்டூர்-விஜயவாடா இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் அவ்வழியே வர இருந்த அமராவதி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. மாச்சர்லா-பீமாவரம் பாசஞ்சர், கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளா னார்கள்.

குண்டூரில் நத்தனபல்லி, நரசராவ்பேட்டை, பிடுகுராள்ளு ஆகிய இடங்களில் புதன் இரவு முதல் கன மழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக அங் குள்ள ஏரிகள் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் மழை வெள்ளத்தில் இந்த பகுதிகளில் 10 பேர் அடித்து செல்லப்பட்டனர். இவர்களைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விப்பர்லா அருகே 47 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இவர்களை பொதுமக்கள் பத்திர மாக காப்பாற்றிக் கரை சேர்ந்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

மழை, வெள்ளம் குறித்து நேற்று விஜயவாடாவில் இருந்து காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

ஹைதராபாத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்ததால், பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஹைதராபாதில் நேற்று மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x