Published : 26 Jun 2019 08:10 AM
Last Updated : 26 Jun 2019 08:10 AM

அவசரநிலை பிரகடனம்; வரலாற்றின் இருண்ட காலம்: பாஜக மூத்த தலைவர்கள் கருத்து

அவசரநிலை பிரகடனம் இந்திய வரலாற்றின் இருண்ட காலம் என பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலையை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்தார். இது 1977-ம் ஆண்டு மார்ச் 21 வரை அமலில் இருந்தது. அவசரநிலை யின் 44-வது ஆண்டு தினத்தை பாஜக நேற்று நினைவு கூர்ந்தது.

இதுகுறித்து பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக, 44 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்தது. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து போராடிய பாரதிய ஜன சங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப் புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானவர்களை இந்த நாடு நினைவு கூர்கிறது” என பதிவிட்டுள் ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “அவசரநிலை அமலில் இருந்தபோது, செய்தித்தாள்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. அத்துடன் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப் பட்டன. அவசரநிலையை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்ட லட்சக்கணக்கானோர் போராடினர். இதற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கத்தை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவசரநிலையும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங் களும் இந்திய வரலாற்றின் இருண்ட காலம். இந்த நாளில் நமது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசி யத்தை நாம் நினைவுகூர்வோம்” என பதிவிட்டுள்ளார்.

சூப்பர் எமர்ஜென்சி

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பானர்ஜி நேற்று ட்விட்டரில், “கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது. வரலாற்றில் இருந்து நாம் கண்டிப்பாக பாடம் கற்க வேண்டும். நாட்டின் ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக் கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் மோடி அரசை குறை கூறும் வகையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.

ஓய்வூதியம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “அவசர நிலை காலத்தில் ஒரு மாதம் வரை சிறையில் இருந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரமும், அதற்கு மேல் சிறையில் இருந்த வர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். சிறை தண்டனை அனுபவித்தவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத் தினருக்கு முறையே ரூ.2,500, ரூ.5000 வழங்கப்படும். இத்துடன் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x