Published : 27 May 2019 07:27 AM
Last Updated : 27 May 2019 07:27 AM

இரண்டாவது முறையாக பிரதமராக 30-ம் தேதி பதவியேற்கிறார் மோடி

நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு மீண்டும் பிரதம ராக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மோடி இன்று தனது தொகுதியான வாரணாசி சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக் கிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப் பற்றியது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் கூட்டம் டெல்லியில் நாடாளு மன்றக் கட்டிடத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் தமிழக முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளத் தலைவரு மான நிதிஷ் குமார், அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பாமக தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சி யின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தேசிய ஜனநாய கக் கூட்டணி நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அதற்கான கடிதத்தை பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர் கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வழங்கினர்.

பிறகு, மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அளித் தார். இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வரும் 30-ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். பிரதமருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்ற னர். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது. குடி யரசுத் தலைவரின் ஊடக செயலா ளர் அசோக் மாலிக் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சி யில் பிரதமருக்கும் மத்திய அமைச் சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் 4.79 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மோடி இன்று வாரணாசி செல்கிறார்.

இதனிடையே, குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி நேற்று இரவு சென்று தனது தாயிடம் ஆசிபெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x