Published : 05 Apr 2019 12:34 PM
Last Updated : 05 Apr 2019 12:34 PM

3 முக்கிய திட்டங்களால் மோடிக்கு அமோக ஆதரவு; தாக்கத்தை ஏற்படுத்தாத ரஃபேல்- கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

பாலகோட் தாக்குதல், 10% இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ஆகிய திட்டங்களால் மோடிக்கு அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளதாகவும், ரஃபேல் விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

லோக்நிதி- தி இந்து ஆங்கில நாளிதழ், திரங்கா தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் ஆகியவை இணைந்து மார்ச் கடைசி வாரத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தின. இதற்காக இந்தியா முழுவதும் இருந்து 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனவரி 7-ம் இருந்து பிப்ரவரி 26 வரை அறிவித்த சில திட்டங்கள் தேர்தல் நேரத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. கடந்த ஜனவரி 7-ம் தேதி உயர் சாதியினர் உட்பட பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கூடு வழங்கப்பட்டது. பிப்ரவரி 1-ம் தேதி அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல பிப்ரவரி கடைசியில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாலகோட் தாக்குதலை நடத்தியது.

 

 மோடி பிரதமர் ஆகவேண்டும் (%)ராகுல் பிரதமராக வேண்டும் (%)
பாலகோட் தாக்குதல் குறித்து தெரியாது3224
தெரியும்4624
இட ஒதுக்கீடு குறித்து தெரியாது3724
தெரியும்4824
கடந்த மாதத்தில் அரசிடம் இருந்து நிதி பெறாத விவசாயிகள்4227
நிதி பெற்ற விவசாயிகள்5422

 

இவற்றின் மூலம் மோடிக்கான ஆதரவு 9% அதிகரித்துள்ளது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு மோடிக்கு 34% ஆதரவு பதிவாகி இருந்தது. அதே வேளையில் தற்போது மோடி அரசின் 3 திட்டங்கள் மூலம் அவருக்கான ஆதரவு 9% உயர்ந்து 43% மக்கள் அவரை ஆதரிக்கின்றனர். 2018-ன் கடைசியில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், மோடிக்கான ஆதரவு அதிகரித்திருப்பதை நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.

 

எனினும் இந்த 3 விஷயங்களும் வாக்களிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பொதுமக்கள் யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை. வாக்களிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் காரணி குறித்துக் கேட்கும்போது, ஐந்தில் ஒருவர் வேலைவாய்ப்பின்மையை சுட்டிக்காட்டினர். ஆறில் ஒருவர் வளர்ச்சியைக் குறிப்பிட்டார். வெறும் 2% மக்களே தேசப் பாதுகாப்பையும் பாலகோட் தாக்குதலையும் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாகக் கூறினர். 3 சதவீதத்தினர் மட்டுமே இட இதுக்கீட்டைக் குறிப்பிட்டனர்.

 

 மோடிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவேண்டும் (%)மோடிக்கு வாய்ப்பு கூடாது (%)
தேர்தல் ஆதாயத்துக்காக பாலகோட் தாக்குதலை பாஜக பயன்படுத்துகிறது4643
தேர்தல் ஆதாயம் ஏதுமில்லை6627
பதில் இல்லை4127

 

எனினும் மற்ற தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, வாக்காளர்களின் மனதில் மோடியின் 3 திட்டங்களின் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. பாலகோட், இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு நிதி ஆகியவை வாக்காளர்கள் ஆளும் பாஜக அரசுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா இல்லையா என்பதை முடிவுசெய்வதில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவ தாக்குதல் குறித்து படித்தவர்களும் கேட்டவர்களும் (50 சதவீதத்தினர்) மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக) வரவேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர். தாக்குதல் குறித்து அறிந்திராதவர்கள் 30 சதவீதம் பேரே மோடி மீண்டும் வர ஆசைப்படுகின்றனர். அதேபோல இட ஒதுக்கீடு, நிதி அளிப்பது குறித்துத் தெரிந்தவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புவது தெரியாதவர்களைக் காட்டிலும் 17% அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையில், பாஜக மீதான ரஃபேல் விமான ஒப்பந்த சர்ச்சையும், காங்கிரஸின் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஃபேல் சர்ச்சை குறித்து பாதிப் பேருக்குத் தெரியவில்லை. மீதமுள்ள பாதிப்பேரில், சிலர் அரசு மீதான நம்பகத்தன்மையை இழக்கவில்லை.

 மோடி நேர்மையானவர், தூய்மையானவர் (%)நேர்மையானவர் ஆனால் ஊழலுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை (%)மோடி ஓர் ஊழல்வாதி (%)
ரஃபேல் குறித்து தெரியும்442424
தெரியாது361717
ரஃபேல் ஒப்பந்தத்தில் தவறு உள்ளது242939
தவறேதும் இல்லை681711

 

காங்கிரஸின் ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வாக்குறுதி குறித்து கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 48% பேருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர்களிடையே ராகுல் காந்தி பிரபலமாகி இருந்தா. எனினும் கருத்துக் கணிப்பு நடந்துகொண்டிருக்கும் போதுதான் இத்திட்ட அறிவிப்பு வெளியானது.

குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் குறித்து காங்கிரஸின் தொடர்ச்சியான விளம்பரங்கள் ஒருவேளை தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x