Published : 10 Oct 2018 09:31 AM
Last Updated : 10 Oct 2018 09:31 AM

உத்தர பிரதேசத்தில் உச்சமடையும் காவல் துறை அராஜகம்!

உத்தர பிரதேசத்தில் காவல் துறை நினைத்தால், யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம் என்ற சூழல் உருவாகியிருப்பதன் தொடர்ச்சிதான் லக்னோவில் ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரி போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் என்ற குரல் அரசியல் மேடைகளில் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. போலீஸார் நிறுத்தச் சொன்ன பிறகும் வேகத்தைக் குறைக்காமல் காரை ஓட்டியதாக திவாரி மரணத்துக்குக் காரணம் சொல்லப்பட்டது. இது நாடு முழுக்க எல்லா ஊடகங்களிலும் பெரும் விவாதம் ஆனது. “உயர் சாதி, உயர் வர்க்கம், பன்னாட்டு பெருநிறுவன வேலைப் பின்னணியில் திவாரி கொல்லப்பட்டது இவ்வளவு பேசப்படுகிறது. ஆனால், முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற இந்த ஒன்றரையாண்டுகளில் மட்டும் பல்வேறு என்கவுன்ட்டர்களில் 67 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; தலித்துகள். ஏழைகள். அதனாலேயே இந்தச் சாவுகள் உரிய முக்கியத்துவம் பெறவில்லை” என்பதை உத்தர பிரதேச எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x