Last Updated : 11 Oct, 2018 01:11 PM

 

Published : 11 Oct 2018 01:11 PM
Last Updated : 11 Oct 2018 01:11 PM

பன்னாட்டு மாநாட்டில் ரூ.10 ஆயிரம் திருட்டு: காதலிக்கு செலவழிக்க திருடிய கூகுள் அதிகாரி சிக்கினார்

புதுடெல்லியில் நடைபெற்ற பன்னாட்டு நிறுவன நிர்வாகிகள் மாநாட்டில் நடைபெற்ற ஒரு திருட்டு சம்பவத்தில் 24 வயது கூகுள் நிறுவன ஊழியர் கைதாகியுள்ளார். தனது காதலிக்கு செலவழிக்கவே திருடியதாக வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று ஐபிஎம் நிறுவனமும் ஒரு முக்கிய ஊடகமும் இணைந்து தாஜ் பேலஸ் ஹோட்டலில் பன்னாட்டு நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் மாநாட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உலக அளவில் நடைபெறும் மாநாட்டில் நிச்சயம் இப்படியெல்லாம் நடக்கும் என்று தேவ்யானி ஜெயின் நினைத்திருக்க வாய்ப்பில்லை. தேவ்யானி மட்டுமல்ல, இந்த மாதிரி மாநாடுகளில் கலந்துகொள்ளும் யாருமே தங்கள் பையை இருக்கையில் வைத்துவிட்டுத்தான் மேடை சார்ந்த நிகழ்வுகளுக்கோ, அல்லது ஓய்வு அறைக்கோ, யாரையாவது சந்தித்துப் பேசவோ சென்று திரும்புவார்கள். ஏனெனில் இடம் அப்படி.

பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் திருடுபோன தொகை 1 லட்சம் 2 லட்சம், 10 லட்சம் என பல்வேறு பிரமாண்ட தொகைகளாக இருக்கும். சில நேரங்களில் எவ்வளவு பெரிய திருடர்கள் என்று நாம் அதிர்ச்சியுடன் சிலரைக்கண்டு வியந்துள்ளோம். அத்தொகைகளைவிட அதற்கு திருடுபவர் யார் என்று பார்த்தால் அவர் திருடியதற்கான அவசர அவசியங்கள் ஒருவேளை நமக்கு சமாதானம் ஏற்படலாம்.

ஆனால் இந்த வழக்கு மிகவும் வினோதமானது. பல லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு என்ஜினீயர், அதுவும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள நிர்வாகிகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் அளவுக்கு தகுதி உள்ள ஒரு எக்ஸிகியூட்டிவ் என்ற தகுதி அவருக்கு உண்டு.

அவர் எதற்காக ரூ.10 ஆயிரம் திருட வேண்டும் என்றெல்லாம் சற்றே மண்டை காயலாம். ஆனால் சிலருக்கு பழக்க தோஷமாகக் கூட இருக்குமோ எனத் தோன்றுகிறது. எண்ணிப்பார்த்தால் வெரி சிம்பிள். எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும் கைஅரிப்பதை சிலரால் தடுக்கமுடியாது. அவர்களை மீறிகூட அது நடந்துவிடும்.

கூட்ட நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க ஒருநேரம்போல தேவ்யானி தனது ஹேண்ட் பேக்கை எதற்கோ அலசியபோது அதிலிருந்து ரூ.10 ஆயிரம் காணாமல் போனதை அறிந்துள்ளார். எதிர்பாராத இந்த திருட்டினால் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீஸிடம் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவும் புலனாய்வும்

இவ்வழக்கு பதிவு செய்துகொண்ட பின்னர் காவல்துறையினர் ஹோட்டல் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்த்துள்ளனர். பதிவான காட்சிகளை ஆய்வுசெய்த பிறகு, ஒரு நபர் மீது சந்தேக்கமடைந்தனர். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலை வைத்து அவரைக் கண்டுபிடித்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் ஹோட்டலின் வெளியே காரில் வந்து இறங்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் கார் வாடகைக்கு எடுத்த நிறுவனத்திடமிருந்து கார் பதிவு எண், குற்றம்சாட்டப்பட்டவரின் செல்போன் எண் ஆகியனவும் பெறப்பட்டது.

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது செல்போனை அணைத்து வைத்துள்ளார். இதனால் உடனடியாக எதுவும் செய்யமுடியாத நிலையில் சற்று தாமதம் ஏற்பட்டது.

விசாரணையில்

எனினும், புதிய செல்போன் எண்ணையும் பின்னர் தேடிக் கண்டுபிடித்தனர். அதன்பிற்கு நேற்று முன்தினம் (செவ்வாய் அன்று) அவரது வீட்டிலேயே சாஹ்னி என்பவர் கைது செய்யப்பட்டார்.

சாஹ்னியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், தனது பெண்தோழியின் செலவை எதிர்கொள்ள பணம் இல்லாத நிலையில் ஏற்பட்ட நிதிநெருக்கடியை சமாளிக்கவே தான் திருடியதாக ஒப்புக்கொண்டார். அவர் திருடியதிலிருந்து ரூ.3 ஆயிரத்தை போலீஸார் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x