Last Updated : 23 Aug, 2018 10:20 AM

 

Published : 23 Aug 2018 10:20 AM
Last Updated : 23 Aug 2018 10:20 AM

பெங்களூருவில் வெள்ள நிவாரண மோசடி: முகநூலில் நிதி வசூலித்த 2 பேர் கைது

கேரளா மற்றும் குடகில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை பெங்களூருவில் போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் குடகு, தென் கன்னடா, சிக்மகளூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளன. இதே போல், கேரள மாநிலமும் மழை வெள்ளத்தால் முற்றிலுமாக உருக்குலைந்துள்ளது. இத‌னால், கர்நாடக மற்றும் கேரள மாநில அரசுகள் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இதன் தொடர்ச்சி யாக, கர்நாடகாவில் பல்வேறு இடங் களில் சமூக நல அமைப்பினரும், தனி நபர்களும் வெள்ள நிவாரண‌ நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், பெங்களூ ருவை சேர்ந்த விஜய் சர்மா என்ப வர், குடகில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது முகநூலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந் தார். அதில், ‘குடவா சமாஜம்’ அமைப்பு மூலம் நிதி சேகரிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டிருந் தது. ஆனால், குடவா சமாஜம் அமைப்பு இந்த நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அந்த அமைப்பின் செயலாளர் சுப்பையா, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில், விஜய் சர்மாவின் வங்கி கணக்கை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது, அதில், பல்வேறு நபர்கள் சார்பில் வழங் கப்பட்ட ரூ 60 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து, குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விஜய் ஷர்மாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம் ஆகியவற்றுக்கும் நிதி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது முகநூல் மூலமாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு வதற்காக ரூ. 1.75 லட்சம் நிதி வசூலித்துள்ளார். இதில், ரூ. 1.25 லட்சத்தை கேரள முதல்வரின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, மீதமுள்ள ரூ. 50 ஆயிரத்தை செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து, அவருக்கு பணம் கொடுத்தவர்கள், பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததால் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், லட்சுமியிடம் நடந்த விசார ணையில், அவர் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில் கூறுகையில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யாரேனும் உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட அரசின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். வெள்ள நிவாரண நிதியில் நிறைய மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் புகார் வருகிறது. இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x