Published : 23 Aug 2018 09:49 AM
Last Updated : 23 Aug 2018 09:49 AM

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா: மத்திய அரசு 32 அம்சத் திட்டம் தயாரிப்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடு வதற்காக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் 32 அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை வரும் அக் டோபர் 2-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி வரை பிரம்மாண்டமாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும் இந்த விழா கோலா கலமாக நடைபெறவுள்ளது.

விழாவைக் கொண்டாடுவதற் கான திட்டங்களைத் தயாரிக்கு மாறு மத்திய அமைச்சகங்களின் பல்வேறு செயலர்கள் அடங்கிய 6 துணைக் குழுக்களை பிரதமர் மோடி கடந்த மாதம் நியமித்தார். இந்த நிலையில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு 32 அம்சத் திட்டத்தை கலாசாரத் துறை அமைச் சகம் உருவாக்கியுள்ளது.

கொண்டாட்டத்துக்கான ஒப்பு தல் தரும் அமைச்சகமாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் உள்ளது.

காந்தி குறித்த தபால்தலை கண்காட்சி, சர்வதேச கருத்தரங்கு கள், நாடகங்கள், கண்காட்சிகள், கவிதை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. மேலும் குடியரசு தினத்தையொட்டி மகாத்மா காந்தி சிறப்பு அலங்கார ஊர்தி, சைக்கிள் யாத்திரைகள், பிறந்தநாள் கொண்டாட்ட நினைவு நாணயம் வெளியிடுதல், மதிப்பு கூடுதல் கருத்தரங்குகள், காந்தி குறித்து கதாகாலட்சேபம் உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங் கள் இதில் அடங்கியுள்ளன.

மேலும் அடுத்த ஆண்டு அலகா பாத்தில் நடைபெறவுள்ள கும்ப மேளாவின்போது காந்தி கிராமத் தையும் தொடங்கி வைக்க மத்திய கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக் காக தனியாக ஒரு இணையதளமும் தொடங்கப்படவுள்ளது. இதில் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள், அமைச்சக குழுக்க ளின் விவரங்கள் அந்த இணைய தளத்தில் இடம்பெறும்.

மேலும் காந்தியின் தண்டி யாத்திரை நினைவாக அடுத்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி சபர்மதியிலிருந்து சிறப்பு உப்பு ரயில் இயக்கப்படும். அதுபோலவே காந்தியின் வாழ்க்கையுடன் தொடர் புடைய பல்வேறு நகரங்களை இணைக்கும்வண்ணம் சபர்மதி யிலிருந்து ஸ்வச்தா எனப்படும் ரயில்களையும் இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த ரயிலில் செல்லும் பயணி களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டு களில் காந்தியின் படம் இடம் பெற்றிருக்கும்.

இந்த ஸ்வச்தா ரயில்கள் செல் லும் முக்கிய ரயில் நிலையங்களில் காந்தியின் பல்வேறு புகைப் படங்கள் வைக்கப்படும். மேலும் ரயில் நிலையங்களில் அவரது சுவரோவியங்களும் இடம்பெறும்.

அதுபோலவே வெளிநாடுகளில் உள்ள மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அலுவலகங்களில் காந்தி பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

மத்திய அமைச்சகங்கள் தயார் செய்துள்ள திட்டங்கள் அனைத்தும் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு அமல்படுத்தப்படும் என்று தெரி கிறது.

காந்தி பிறந்தநாள் கொண்டாட் டத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கப் படும் என்று கடந்த பட்ஜெட் உரையின்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x