Published : 23 Aug 2018 09:09 AM
Last Updated : 23 Aug 2018 09:09 AM

உத்தரபிரதேசத்தில் கள்ளச் சாராயம் குடித்த 5 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கள்ளச் சாராயம் குடித்த 5 பேர் இறந்தனர்.

உத்தரபிரதேசத்தில் முசாபர் நகர் மாவட்டம் கமால்பூர் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் 7 பேர் கள்ளச் சாராயம் குடித்தனர். தலைசுற்றலும் வாந்தியும் நெஞ்சு எரிச்சலும் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 3 பேர் இறந்தனர். நேற்று மேலும் 2 பேர் இறந்தனர். கள்ளச்சாராயத்தை ஜோகா சிங் (55) என்பவர் வாங்கி வந்து மற்றவர்களுக்கு கொடுத்து தானும் குடித்துள்ளார். சிகிச்சை பலனின்றி ஜோகா சிங்கும் இறந்தார். இது தொடர் பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 கான்ஸ்டபிள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x