Last Updated : 08 Jun, 2018 04:31 PM

 

Published : 08 Jun 2018 04:31 PM
Last Updated : 08 Jun 2018 04:31 PM

யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலர் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டியவர் கைது

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலர் ரூ.25 லட்சம் கேட்டதாக புகார் தெரிவித்த தொழிலதிபர் இன்று (வியாழன்) கைது செய்யப்பட்டார்.

லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் குப்தா உத்தரப் பிரதேச முதல்வரின் முதன்மைச் செயலர் மீது லஞ்சப் புகார் அளித்திருந்தார். அவர் பெட்ரோல் அமைப்பதற்கு அனுமதி அளிக்க ரூ.25 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறினார். இப்புகார் எழுந்ததிலிருந்து உ.பி.அரசுக்கு நெருக்கடி உருவானது.

இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது புகார் தெரிவித்த தொழிலதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபின் அவர் கைதுசெய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து குப்தா ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ‘‘எஸ்.பி.கோயலை எப்போது சந்தித்தேன் என்று எனக்கு நினைவில்லை. அவர்தான் மறைமுகமாக என்னிடம் அதைக் கோரினார். பின்னர் அவர் நேரடியாகவே ரூ.25 லட்சத்தை என்னிடம் கேட்டார். பணத்தை தரவில்லையென்றால்  பெட்ரோல் பங்க் அனுமதி உத்தரவை ரத்துசெய்துவிடுவேன் என்று அவர் மிரட்டினார்.

நான் பொருளாதார ரீதியாக வலுவாக இல்லை. ரூ.1 கோடி கடன் பெற்றுத்தான் இந்த பெட்ரோல் பங்கையே அமைக்கிறேன். என்னால் நீங்கள் கேட்கும் பணம் தர இயலாது என்று அவரிடம் நான் கூறினேன். இதையே கவர்னருக்கு அளித்துள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

இப்பிரச்சனை தொடர்பாக முதல்வருக்கு நிறைய கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால் அவரிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதுதொடர்பாக எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x