Last Updated : 08 Jun, 2018 08:25 PM

 

Published : 08 Jun 2018 08:25 PM
Last Updated : 08 Jun 2018 08:25 PM

பிரணாப் முகர்ஜியின் ‘மார்ஃப்’ செய்யப்பட்ட புகைப்படத்தினால் எழுந்த சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசுக் கட்சித்தலைவரான பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டது தொடர் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது.

முதலில் எழுந்த விமர்சனங்கள் அவர் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலிருந்து அவரை தடுக்க ‘நாட்டின் பிரிவினைவாத சக்திகள்’ சூழ்ச்சி செய்வதாக ஆர்.எஸ்.எஸ். குற்றம்சாட்டியது. தற்போது அந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டதை ஆர்.எஸ்.எஸ். ஸ்டைல் சல்யூட் அடித்ததாக மார்ஃப் செய்யப்பட்ட ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் புழங்கிய நிலையில் இதே ஆர்.எஸ்.எஸ். மீண்டும் இதே பிரிவினைவாத சக்திகளின் வேலை என்று சாடியுள்ளது.

இது குறித்து ஸ்வயம் சேவக் இணைச் செயலர் மன்மோகன் வைத்யா கூறும்போது, “சில பிரிவினைவாத சக்திகள் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் புகைப்படத்தை மார்ஃப் செய்து சங்கப் பிரார்த்தனையை வலது கையை மடக்கி இடது நெஞ்சுக்கு நேராக வைத்து செய்தது போல் வெளியிட்டுள்ளனர்.

இதே சக்திகள்தான் முன்பு அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தடுக்கவும் வேலை செய்தன. இதே சக்திகள் தான் தற்போது ஆர்.எஸ்.எஸ் புகழைக் கெடுக்க இத்தகைய அசிங்கமான செயல்களில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய கீழ்த்தரமான செயல்களை சங்கம் தீவிரமாகக் கண்டிக்கிறது” என்று கடுமை காட்டியுள்ளார்.

ஆனால் பிரணாபின் மகளும் காங்கிரஸ் தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி தந்தையின் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி வருகையை எதிர்த்தவர், இந்த மார்ஃப் போட்டோ பற்றி கூறும்போது, “பாருங்கள், இதைத்தான், இதையேதான் நான் நினைத்து அஞ்சினேன். என் தந்தையையும் எச்சரித்தேன். சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை பாஜக/ஆர்.எஸ்.எஸ் இத்தகையதொரு அசிங்கமான தந்திரங்களில் இறங்கியுள்ளது” என்று சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x