Published : 26 Aug 2024 05:26 AM
Last Updated : 26 Aug 2024 05:26 AM

20 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பஞ்சாபி தந்தையை சந்தித்த ஜப்பானிய மகன்

தந்தையிடம் சிறுவயது புகைப்படங்களை காட்டி மகிழும் ரின் தகஹடா.

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்பால் சிங். தாய்லாந்தில் வேலைபார்த்தபோது இவருக்கும் அந்தநாட்சைச் சேர்ந்த சச்சி தகஹடாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, 2002-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டவுடன் ஜப்பானில் குடியேறினர். அங்கு அவர்களுக்கு 2003-ம் ஆண்டு ரின் தகஹாட்டா என்ற மகன் பிறந்தார்.

இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் 2007-ல்இந்தியாவுக்கு திரும்பிய சுக்பால் சிங் மீண்டும் ஜப்பானுக்கு செல்ல முடியவில்லை. பின்னர் அவர் குடும்பத்தினர் வற்புறுத்தல் காரணமாக குர்விந்தர்ஜித் கவுர் என்பவரை மணம் முடித்த அவர் அவ்லீன் பன்னு என்ற மகளுக்கு தந்தையானார்.

இந்ந நிலையில், தாயார் சச்சிதகஹடா பாதுகாத்து வைத்திருந்ததந்தையின் முகவரி, புகைப்படைங்களுடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரக் ஷா பந்தனுக்கு முந்தையநாளான ஆகஸ்ட் 18 அன்று பஞ்சாபுக்கு திரும்பிய ரின் தகஹடா தனது தந்தையை தேடி அலைந்தார். இறுதியில், அவரின் இளமைக்கால புகைப்படங்களை பார்த்த சிலர் ரின் தகஹடாவை லோஹர்கா சாலையில் உள்ள அவரது தந்தையின் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது வீட்டிலிருந்த குர்விந்தர்ஜித் கவுர், ரின்னை தனது சொந்த மகனைப்போல் வரவேற்றார். இதையடுத்து, வெளியில் சென்றிருந்த சுக்பால் வீட்டுக்கு திரும்பியதும் 20 ஆண்டுக்குப் பிறகு தனது மகனைப் பார்த்த சந்தோஷத்தில் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார். அவ்வீன் பன்னு தனது ஜப்பானிய சகோதரர் ரின்னின் மணிக்கட்டில் ராக்கி கட்டி மகிழ்ந்தார்.

இதுகுறித்து சுக்பால் சிங் கூறுகையில், “ரக்ஷா பந்தனுக்காக மனைவியின் சகோதரரின் வீட்டுக்கு சென்றிருந்தபோது, ஜப்பானில் இருந்து எனது மகன் வந்திருப்பதாக போன் வந்தது. இதைக் கேட்டுஅதிர்ச்சியடைந்த நான் ஓடிச் சென்று எனது மகனை பார்த்தபோது அனுபவித்த உணர்வுகளை வர்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x