Published : 18 Aug 2024 06:06 AM
Last Updated : 18 Aug 2024 06:06 AM

பெண் மருத்துவர் கொலை வழக்கு: மம்தா பதவி விலக நிர்பயா தாய் வலியுறுத்தல்

புதுடெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை கையாள்வதில் மேற்கு வங்க அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் முதல்வர் மம்தா பதவி விலக வேண்டும் என்றும் நிர்பயா தாய் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் (நிர்பயா) தாய் ஆஷா தேவி கூறியதாவது:

முதல்வரும் பெண்தான்: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த மாநிலத்தின் முதல்வர் ஒரு பெண் (மம்தா பானர்ஜி). இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த சம்பவத்தைக் கண்டித்து முதல்வரே போராட்டம் நடத்துகிறார். இந்த விவகாரத்தை கையாள்வதில் தோல்வி அடைந்த மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் மூலம்தண்டனை பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் தினமும் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x