Published : 18 Aug 2024 06:33 AM
Last Updated : 18 Aug 2024 06:33 AM
அமராவதி: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை, சந்திரபாபு நாயுடுவுடன், அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆந்திராவில் புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆந்திராவில் ஏற்கனவே 7 விமான நிலையங்கள் உள்ளன. இதனை 14 ஆக உயர்த்த வேண்டும் என்பதே இலக்காகும். அதேசமயம் ராஜமுந்திரி, கடப்பா, விஜயவாடா விமான நிலையங்களில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்துதான் எங்கள் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு நடந்தது. விரைவில் இதற்கான பணிகளை தொடங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், குப்பம், காகுளம், தகதர்த்தி, நாகார்ஜுன சாகர் ஆகியஊர்களில் விமான நிலையத்துக்கான இடங்கள் சர்வே செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய விமானத் துறையும், மாநில அரசும் இணைந்து முடிவெடுக்கும்.
விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை பெருக் கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தி விமான நிலையத்தை அரசின் விமான நிலையமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT