Last Updated : 13 May, 2018 04:12 PM

 

Published : 13 May 2018 04:12 PM
Last Updated : 13 May 2018 04:12 PM

இது தான் என்னுடைய கடைசித் தேர்தல்: கர்நாடக முதல்வர் சித்தராமையா உருக்கம்

கர்நாடகத்தில் இப்போது நடந்துள்ள சட்டசபைத் தேர்தல்தான் எனக்கு கடைசித் தேர்தல் என்று மாநில முதல்வர் சித்தராமையா உருக்கமாகத் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நேற்று (மே 12) நடந்து முடிந்தது.இதில் பாஜக, ஆளும் காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கணிக்கப்பட்டது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி இருக்கும் என கருத்துக்கணிப்பில் முடிவுகள் வெளியானது.

இந்த தேர்தலில் முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இதில் சமுண்டீஸ்வரி தொகுதிக்கு இன்று முதல்வர் சித்தராமையா சென்று இருந்தார். அப்போது நிருபர்கள் அவர்களிடம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்குமா ? எனவும், கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றி பெறும், பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்கும். மீண்டும் தென் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் நிலையில், இதுதான் எனக்குகடைசித் தேர்தலாக அமையும்.

ஒரு வேளை காங்கிரஸ் கட்சி வென்று, தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல்வராக வேறு யாரேனும் நியமித்தாலும், கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்.

காங்கிரஸ் கட்சி கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது போலவே இந்த முறையும் ஆட்சி அமைப்போம். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் ஆதரவு தேவைப்படாது என்றே நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை தேர்தல் முடிந்தபின் வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கையான 15-ம் தேதிவரை யிலான பொழுதுபோக்குக்காக வெளியிடப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை. காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்

இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x