Published : 24 Jun 2024 05:22 AM
Last Updated : 24 Jun 2024 05:22 AM
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதிகளிட மிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த சீன அல்ட்ரா செட் தொலைத்தொடர்பு சாதனங்களை இந்திய ராணுவம் பறிமுதல் செய்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயிற்சி பெற்று காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் பலர் ஊடுருவி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான கருவிகள், ஆயுதங்களையும் அளிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை சீன தயாரிப்புகளாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் நேற்று கூறியதாவது: சீனா தயாரித்த அலட்ரா செட்என்ற இந்த அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இந்த தொலைத்தொடர்பு உபகரணங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் கண்டறியப்படாத ஊடுருவல்களுக்கு மத்தியில் இந்த உபகரணங்கள் பிடிபட்டுள்ளது கவலையை அதிகரித்துள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ளசூரன்கோட்டின் சிந்தாரா டாப் பகுதியிலும், பாரமுல்லா மாவட்டத்தில்சோபோரின் செக் மொஹல்லா நவ்போராவிலும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது இந்த அல்ட்ரா செட் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சாதனங்கள்செய்திகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்காக ரேடியோ அலைகளில் இயங்குகின்றன, அவை ஒவ்வொன்றும் எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT