Published : 12 Jun 2024 05:44 AM
Last Updated : 12 Jun 2024 05:44 AM
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்சில் பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இதில், முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து அங்குள்ள ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டி ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோட முயன்றது.
அப்போது மேகநாத் மொண்டல் என்ற காவல் துறை உதவியாளர் தனது உறவினரைப் பார்க்க அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். சாதாரண உடையில் இருந்த அவர் துப்பாக்கியை வைத்திருந்தார். நகைக் கடையில் அசாதாரண சூழல்நிலவுவதை அறிந்த அவர் கடைக்குஅருகில் இருந்த மின் கம்பத்துக்கு பின்னால் நின்று கொண்டு அங்கு நடப்பதை கவனித்தார்.
அப்போது, அந்த கொள்ளை கும்பல் நகைக்கடையில் கொள்ளையடித்து விட்டு தப்பியோட முயல்வதை உதவி ஆய்வாளர் தெரிந்து கொண்டார். இதையடுத்து, உதவி ஆய்வாளர்மேகநாத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கி சுட்டார். பின்னர் சுதாரித்து கொண்ட கொள்ளையர்களும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.உதவி ஆய்வாளர் சுட்டதில் கொள்ளையன் ஒருவர் காயமடைந்து சுருண்டு விழுந்ததால் பயந்துபோன மற்ற கொள்ளையர்கள் ரூ.1.8 கோடி மதிப்புள்ள நகையை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பியோடினர்.
கொள்ளையர்களை துரத்திச் சென்ற மேகநாத் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அண்டை மாநிலமான ஜார்க்கண்டுக்கும் இதுகுறித்து தெரியப்படுத்தப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சூரஜ் சிங் மற்றும் சோனுசிங் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். எஞ்சிய நபர்களைதேடி வருவதாகவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கைப்பற்றுவோம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
স্রেফ একটি বিদ্যুতের খুঁটিকে 'মেঘ' বানিয়ে তার আড়াল থেকে আগাগোড়া লড়ে গেছেন বাস্তবের 'মেঘনাদ', জীবনের বিন্দুমাত্র তোয়াক্কা না করেই। রোমহর্ষক সেই কাহিনি শুনতে চাওয়ার অসংখ্য অনুরোধ আসছে পরিচিতদের কাছ থেকে, আর মেঘনাদ এড়িয়ে যাচ্ছেন অল্প হেসে। ..(১৫/১৬) pic.twitter.com/EyE290gyNW
— West Bengal Police (@WBPolice) June 11, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT