Published : 07 May 2024 07:55 AM
Last Updated : 07 May 2024 07:55 AM
புதுடெல்லி: நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், பெரிய கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் போன்ற உயர் பதவிகளுக்கான நியமனங்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நடைபெறவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த துணை வேந்தர்கள், முன்னாள் துணை வேந்தர்கள், கல்வி நிறுவன தலைவர்கள் உட்பட 181 பேர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில் கல்வியாளர் கள் கூறியிருப்பதாவது: எந்த ஆதாரமும் இல்லாமல் ராகுல் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். குறிப்பாக துணை வேந்தர் நியமனங்கள், துறைத் தலைவர் நியமனங்கள் தகுதி, திறமை அடிப்படையில் நடக்கவில்லை என்கிறார்.
இதுபோன்று அவர் பேசுவது அரசியல் ஆதாயத்துக்காகத்தான். அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை அவர் கூறுகிறார். கட்டுக்கதைகளுக்கும் உண்மைக்கும் உள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். துணை வேந்தர் நியமனங்கள் வெளிப்படையாக நடைபெறுகின்றன. கல்வித் தகுதி, திறமை,அனுபவம் உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டுதான் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
எனவே, பொய்யான தகவல் களை பரப்புவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். துடிப்புள்ள மற்றும் கல்விச் சூழலை மேம்படுத்த தேவையான தரவுகளை வைத்துக் கொண்டு ராகுல் கலந்துரையாடலுக்கு வரவேண்டும். பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் ராகுல் காந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் கடிதங்களையும் கல்வியாளர்கள் அனுப்பி வருகின்றனர். அவர்களில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி, எம்எஸ்பல்கலைக்கழகம், பரோடா, ஹரியாணா மத்திய பல்கலைக்கழகம், மகேந்திரகர், வடகிழக்கு மலைப்பிரதேச பல்கலைக்கழகம், ஷில்லாங் மற்றும் ஏஐசிடிஇ தலைவர், யுஜிசி முன்னாள் தலைவர், என்சிஇஆர்டி இயக்குநர்உட்பட 181 பேர் ராகுல் காந்திக்குஎதிராக புகார் கடிதம் எழுதியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT