Published : 22 Apr 2024 06:54 AM
Last Updated : 22 Apr 2024 06:54 AM

மணிப்பூரில் 2 மாவட்டங்களில் இன்று மறுவாக்குப் பதிவு: தேர்தல் ஆணையம் உத்தரவு

கோப்புப்படம்

இம்பால்: மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவையின் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இதில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு இம்பால் மற்றும் கிழக்கு இம்பால் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஏப்ரல் 22-ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 58(2) மற்றும் 58ஏ(2) ன்படி மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்திலும் கலவரம்: மேற்கு வங்க மாநிலத்தின்42 மக்களவை தொகுதிகளில் 3தொகுதிகளுக்கு மட்டும் கடந்த19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என அந்த 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக ஆதரவாளர்கள் இடையே கலவரம் மூண்டது. நாட்டு வெடிகுண்டு, கற்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x