Published : 22 Apr 2024 05:16 AM
Last Updated : 22 Apr 2024 05:16 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: குழந்தைக்கு சிகைநீக்கி காது குத்த, சோறு ஊட்ட, நகைகள், வாகனம் வாங்க, சொத்து பத்திரப் பதிவு செய்ய நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் வராது என்று நினைத்திருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். சலசலப்புகள் ஓய்ந்து வீட்டில் அமைதி திரும்பும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.

மிதுனம்: முக்கிய வேலைக்காக பிரபலங்களின் உதவியை நாடி செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர். எக்காரியத்திலும் நிதானம், பொறுமை தேவை.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வந்து சேரும். இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சை அனைவரும் மதித்து நடப்பார்கள். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.

கன்னி: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்துகொள்வார்கள். எனவே, பேச்சில் அதிக கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் உங்களுக்கு எரிச்சல், கோபத்தை ஏற்படுத்தும். பல வகையிலும் பொருட்கள் சேரும்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள்.

விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். உற்சாகமான, எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

தனுசு: வீண் கவலை, அச்சம், தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். அதிகாரிகள், சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். திடீர் வெளியூர் பயணத்தால் உடல் சோர்வு, வயிற்று பிரச்சினைகள் வந்து நீங்கும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். வீண் செலவை கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குலதெய்வ பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x