Published : 20 Mar 2024 07:05 AM
Last Updated : 20 Mar 2024 07:05 AM

பாஜக கூட்டணியில் 2 தொகுதி ஒதுக்கியதால் குமாரசாமி அதிருப்தி

குமாரசாமி | கோப்புப்படம்

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் அக்கட்சி மண்டியா, கோலார், ஹாசன், தும்கூர், பெங்களூரு ஊரகம் ஆகிய 5 தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது.

இதில் பாஜக தும்கூர், பெங்களூரு ஊரகம் ஆகிய இரு தொகுதிகள் உட்பட 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும் மஜதவுக்கு கோலார் தொகுதியை தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக - மஜத இடையேயான கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் மஜத மாநில தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x