Last Updated : 03 Feb, 2018 06:28 PM

 

Published : 03 Feb 2018 06:28 PM
Last Updated : 03 Feb 2018 06:28 PM

காலை உணவும் கூட கல்விக்கண்களைத் திறக்கும்: மாணவர்களுக்கு அன்னமிடும் தன்னார்வக் கைகள்

பள்ளிக்கூட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதே பெரிய கடமைதான். என்றாலும், நிறைய ஏழைக்குழந்தைகள் காலையில் பள்ளிக்கு பசியோடு வருகிறார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

காலை உணவும்கூட கல்விக்கண்களைத் திறக்கும் என்கிறார்கள் ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே 27 பள்ளிகளுக்கு காலை உணவளித்துவரும் தன்னார்வலர்கள்.

விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபாலபுத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் வெறும் 35 மாணவர்களுக்குத்தான் காலை உணவை வழங்கத்தொடங்கினார்கள் இவர்கள். தற்போது பெண்டுர்த்தி, சினகாடிலி யனே பெடகந்த்யாடா மண்டலங்களில் உள்ள 27 தொடக்கப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மொத்தம் 1,800 மாணவர்களுக்கு இவர்களது உணவு வழங்கும் சேவை விரியத் தொடங்கியுள்ளது.

சமூக அக்கறையுள்ள பொதுமக்கள் சிலர் ஆரம்ப முயற்சிகளில் இறங்கினர். அவர்கள் ஒன்றாக இணைந்து புதிதாக சமைத்த காலை உணவை இலவசமாக வழங்குகின்றனர். அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒவ்வொருநாள் காலை உணவையும் எக்காரணத்தைக் கொண்டும் இனி தவிர்க்க வேண்டியதில்லை என்ற நிலையை அவர்கள் உருவாக்கிவிட்டனர்.

பல்வேறு தொழில்முறை பின்னணியில் இருந்து வருகை தந்த தன்னார்வளர்கள் ஸ்ரீ சத்ய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளையுடன் இணைந்து தங்கள் மாத வருமானம் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்குகின்றனர். ஒவ்வொரு வேலை நாளிலும் சூடான காலை உணவு தரமுடியும் என்பதை உதவுவதை அவர்கள் உறுதி செய்ய முடிகிறது அவர்களால்.

10 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு

"பல ஆண்டுகளுக்கு முன்பு, பல மாணவர்கள் வெறும் வயிற்றுடன் பள்ளிக்கூடத்திற்கு வருவதை அறிந்தபோது நாங்கள் ஏதாவது செய்யவேண்டுமென முடிவு செய்தோம். ஆரோக்கியமான காலை உணவை வழங்குவதுடன் கூடுதலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறோம்" எனக் கூறும் சிவகோடி மதுசூதன் ராவ் இக்குழுவில் ஒரு தன்னார்வலர். இவர் ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி எல்ஐசி வளர்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றி வருபவர்.

மாணவர்களுக்கு காலைவேலையில் வழங்கப்படும் இவ் உணவு, வாரம் முழுவதும் சுழற்சிப் பட்டியலில் உள்ளவாறு வழங்கப்படுகிறது. காய்கறி பிரியாணி, பொங்கல், கலந்த சாதம், உப்புமா மற்றும் தயிர் சாதம் ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்ற உணவு வகைகளாகும். இவ்வகை உணவுகள் பெரிய அளவில் சமைக்கப்பட்டு அருகிலுள்ள நான்கு பள்ளிகளிலும் வழங்கப்படுகின்றன.

சுகாதார சேவையும் உண்டு

இக்குழுக்களில் மருத்துவர்களும் ஒரு பகுதியாக இருப்பதால், அக்குழு மாணவர்களின் சுகாதாரமும் கவனித்துக் கொள்கிறது. ''பல் மற்றும் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன," என்கிறார் இதில் தன்னார்வலராகப் பணியாற்றும் பல்மருத்துவர் எஸ்.கே. சந்தோஷ், என்றார்.

உண்டி கொடுத்தேரே உயிர் கொடுத்தோர் என்பது அக்கால சான்றோர் வாக்கு; காலை உணவும் கூட கல்விக்கண்களைத் திறக்கும் என்பது இக்கால நல்லோர் வாக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x