Last Updated : 03 Feb, 2018 04:14 PM

 

Published : 03 Feb 2018 04:14 PM
Last Updated : 03 Feb 2018 04:14 PM

தெலுங்கானா காடுகளில் சாதகமான சூழல்: புலிகளின் எண்ணிக்கை பெருகுவதாக கணக்கெடுப்பில் தகவல்

தெலுங்கானா காடுகளில் புலிகள் மற்றும் பிற விலங்குகளின் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது, கணக்கெடுப்பு முடிவுகள் வந்தவுடன் சரியான எண்ணிக்கை தெரியவரும் என்று பிரபல புலிகள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாமிசப் பட்சினி மற்றும் தாவரப் பட்சினி (யானை போன்ற விலங்குகள்) உள்ளிட்ட புலிகள் கணக்கெடுப்பு அமைப்பு ஒன்று தெலுங்கானா காடுகளில் ஜனவரி 22 முதல் 29 வரையிலாக மேற்கொண்ட ஆய்வில் இவ்வுண்மை தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் 2014 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிறகு காடுகளில் நடத்தப்படும் முதல் கணக்கெடுப்பு இதுவாகும்.

இதுகுறித்த வனத்துறையின் மூத்த அதிகாரி (ஓய்வு) தெரிவித்ததாவது:

பொதுவாக அங்கு ஒரு நல்ல சூழல் நிலவுகிறது. புலிகளின் எண்ணிக்கை மேலும் பெருகுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் இக்காலகட்டத்தையும் சூழலையும் அடிப்படையாகக் கொண்ட யூகங்களே.

அதேநேரம் தெலுங்கானா வனங்களில் கணக்கெடுப்புப் பணியை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் நடமாட்டம் குறித்து பதிவதற்கான நிலையான படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் ஈடுபடுவோருக்கு பயிற்சி நெறிமுறைகள் தரநிலைப்படுத்தப்பட்டவையாகும்.

கணக்கெடுப்பு அதிகாரிகளால் நிரப்பப்பட்ட படிவங்கள் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் டேராடூனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வொயில்டு லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு அனுப்பப்படும். எவ்வளவு புலிகள் அதிகமாகியுள்ளன என்ற முடிவு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும். பகுப்பாய்வு பகுதியும் மதிப்பீடு பகுதியும் முழுமையாக டேராடூன், இந்திய வனவிலங்கு நிறுவனத்தால் எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.

தெலுங்கானா பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கை (பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில்) 2013-14இல் (கடந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது) 17 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் நாட்டில் புலி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அரசின் அனைத்து வனப்பகுதிகளிலும் இப்பயிற்சியை நடத்த போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததால், வனத்துறை, தொண்டு நிறுவனங்கள், மாணவர் சமூகம், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மற்றவர்களின் உதவியையும் எடுத்துக் கொண்டது.

விஞ்ஞானிகள், ஐ.டி. நிபுணர்கள், மருத்துவ மருத்துவர்கள், வங்கியாளர்கள் மற்றும் பலர் உட்பட பல்வேறு பின்னணியில் இருந்து தன்னார்வலர்கள் வந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x